காவிரியாற்றில் மாயமான சிறுவர்களை தேடும் பணி கைவிடல்

முசிறி, நவ.23: முசிறியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்கள் முசிறி காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். அப்போது உறவினரின் குழந்தைகள் ரித்தீஷ்(12), மிதுனேஷ்(8) ஆகியோர் நீரில் மூழ்கினர். தொடர்ந்து இருவரையும் முசிறி தீயணைப்பு படையினர், போலீசாரும் கடந்த 5 நாட்களாக தீவிரமாக தேடினர். ஆனால் சிறுவர்கள் மீட்கப்பட்டவில்லை. இந்நிலையில் 6ம் நாளான நேற்று அரசு தரப்பில் சிறுவர்களை தேடும் பணி கைவிடப்பட்டது.

இதையடுத்து திருச்சி எலமனூர் பகுதிகளை சேர்ந்த மீனவர்களை அழைத்து வந்து காவிரியாற்றில் சிறுவர்களை உறவினர்கள் தேடி அலைந்தனர். மாலை வரை தேடியும் சிறுவர்கள் உடல் கிடைக்கவில்லை.

Related Stories:

>