×

திருவாரூர் அருகே கூடூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேக்கம்

திருவாரூர், நவ. 23: திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக காரைக் குடிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தற்போது ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ரயில் பாதையில் ஏற்கனவே இருந்து வந்த ரயில்வே கேட்டுகள் பலவற்றிலும் ஆட்களை குறைப்பதற்காக அந்த ரயில்வே கேட் இருந்த இடத்தில் ரயில்வே லைன் அடிப்பகுதியில் பொதுமக்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவாரூர் அருகே கூடூர் என்ற இடத்தில் இதேபோன்று ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சுரங்கப்பாதையானது அங்கு உள்ள காட்டாற்றின் கரையை ஒட்டியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது அந்தக் காட்டாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் சுரங்கப் பாதையின் வடிகாலுக்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில் ஆற்றின் நீரானது உட்புகுந்து இந்த சுரங்க பாதையை அடைத்துள்ளதால் இந்த சுரங்கப்பாதை ஒட்டிய கூத்தங்குடி, அன்னுக்குடி, அன்னவாசல், கல்யாண மகாதேவி, கட்டளை தெரு உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பொதுமக்கள் இந்த சுரங்க பாதையை கடந்து திருவாரூர் நகரத்திற்குள் வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மழை காலத்தில் இதேபோல தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் இதற்கு நிரந்தர தீர்வினை மாவட்ட நிர்வாகம் உடனே மேற்கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்ட போதே மழை காலத்தில் பெரும் பாதிப்பாக இருக்கும் என்பதால் இப்பகுதியில் முன்பு இருந்தவாறு ரயில்வே கேட் ஒன்று அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட நிர் வாகத்திற்கும், ரயில்வே துறைக்கும் நூற்றுகணக்கான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதனை சற்றும் பரிசீலனை செய்யாமல் சுரங்க பாதை அமைக்கப்பட்டதன் விளைவாக தற்போது அப்பகுதி மக்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை எற்ப் பட்டுள்ளது. இதனை சற்றும் பரிசீலனை செய்யாமல் சுரங்க பாதை அமைக்கப் பட்டதன் விளைவாக தற்போது அப்பகுதி மக்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை எற்பட்டுள்ளது. மேலும் இந்த ஊர்களில் தீ விபத்து ஏற்ப்பட்டால் தீயணைப்பு வாகனம் செல்ல வழியில்லாமல் இருந்து வருவதுடன் அவசர சிகிச்சைக்கு கூட பொதுமக்கள் நகரத்திற்குள் உடனே வர முடியாத நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ரயில்வே லைனை கடந்தவாறும், சுரங்க பாதையின் இடுப்பளவு நீரில் பொதுமக்கள் சென்று வரும் நிலை இருந்து வருகிறது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வினை மாவட்ட நிர்வாக மும் ரயில்வே துறையும் உடனடியாக எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags : railway tunnel ,Thiruvarur ,Koodoor ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...