×

ஒருவர் கைது அடிக்கடி விபத்து ஏற்படும் ஏம்பல்-மித்ராவயல் சாலையை ஆய்வு செய்து சரிசெய்ய கோரிக்கை

திருமயம், நவ.23: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஏம்பலில் இருந்து மித்ராவயல் வழியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு செல்லும் சாலை அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டது. சாலை புதுப்பிக்கும்போது சாலை பக்கவாட்டில் சாலையோரம் இருந்த மணலை பொக்லைன் இயந்திரம் கொண்டு அணைக்கப்பட்டது. அப்பகுதி உள்ள மணல் களியாக இருப்பதால் புதுப்பிக்கப்பட்ட மித்திராவயல் சாலையில் ஒரே நேரத்தில் இருண்டு வாகனங்கள் எதிரெதிரே வரும் போது ஒரு வாகனம் கண்டிப்பாக சாலையைவிட்டு சற்று கீழே இறங்கி வழிவிட வேண்டி உள்ளது.

அவ்வாறு வழிவிடும்போது சாலையை விட்டு கீழே இறங்கிய வாகனம் சாலையோரம் உள்ள மணலில் சிக்கி கவிழும் நிலை உருவாகிறது. மேலும் சாலை வளைவுகளை வாகன ஓட்டிகள் அறியும் வகையில் எச்சரிக்கை பலகை இல்லாததால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதனிடையே மித்ராவயல் சாலையில் உள்ள விருதன்வயல் பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏம்பல்-மித்ராவயல் சாலையை ஆய்வு செய்து மேலும் விபத்து நடக்காமல் இருக்க அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,accidents ,Ambal-Mithravayal ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...