×

மழையை தொடர்ந்து வெயில் புழுதி மண்டலமாக மாறிய எஸ்என் ஹைரோடு வாகன ஓட்டிகள் தத்தளிப்பு

நெல்லை, நவ.23: நெல்லையில் தொடர் மழைக்கு பின் வெயிலடிப்பதால் டவுன் எஸ்என் ஹைரோட்டில் படிந்திருந்த சகதி வாகன போக்குவரத்தால் புழுதி மண்டலமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் குடிநீர் பணிக்காக பல்வேறு சாலைகள் உடைக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. இதில் நெல்லை டவுனில் இருந்து சந்திப்பு பகுதிக்கு வரும் எஸ்என் ஹைரோடு சாலையும் உடைக்கப்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டது. இருந்த போதும் சாலை ஓரங்களில் மணல்கள் குவிந்து காணப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அடிக்கடி பெய்த மழையால் குடிநீர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் ேதங்கி எஸ்என் ஹைரோடு சகதிகாடாக மாறியது.

இதையடுத்து பள்ளமான பகுதிகளில் மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் மணல், கட்டிட இடிபாடுகளை கொட்டி நிரப்பினர். இதனால் இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் தட்டுதடுமாறித்தான் பயணிக்கின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழை தற்போது சற்று தணிந்து காணப்படுகிறது. நெல்லை மாநகர பகுதியில் கடந்த இரு தினங்களாக வெயில் அடிப்பதால் சாலைகளில் படிந்திருந்த சகதி காய்ந்து வருகிறது. தொடர்ந்து பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் சிறிய வாகன போக்குவரத்து காரணமாக காய்ந்த சகதிகள் இருந்து புழுதி பறந்து வருகிறது.

இதனால் எஸ்என் ைஹரோடு முழுவதும் புழுதி மண்டலமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், இரு சக்கரவாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தூசி படர்ந்த காற்றை சுவாசிப்பதால் மூச்சு திணறல் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : SN Hero Road ,Motorists ,rains ,zone ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...