×

அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு ஜப்பானிய மியாவாக்கி காடு வளர்ப்பு பயிற்சி முகாம்

காரைக்கால், நவ.23: காரைக்கால் பஜன்கோவா (பண்டித ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு, ஜப்பானிய மியாவாக்கி காடு வளர்ப்பு குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. காரைக்கால் செருமாவிளங்கையில் இயங்கி வரும் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில், இளங்கலை வேளாண் பட்டப்படிப்பில், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், கிராமத்திட்டம் என்னும் நேரடி களப் பயிற்சியினை, கொரோனா தொற்று காரணமாக, அவரவர்கள் வசிக்கும் கிராமங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி இணை பேராசிரியர் அனந்தகுமார் தலைமையில், காரைக்கால் வடமட்டம் கிராமத்தில், ஜப்பானிய மியாவாக்கி காடு வளர்ப்பு முறை குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.முகாமில், ராஜ செந்தில்குமார் மாணவர்களிடம் ஜப்பானிய மியாவாக்கி காடு வளர்ப்பு முறை குறித்து பேசினார். தொடர்ந்து, கல்லூரியின் இணை பேராசிரியர் ஆனந்தகுமார் மாணவர்கள் மத்தியில் பேசினார். மாணவி இந்துஜா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். இறுதியாக, மாணவி ஜனனி, தான் பயின்ற அரிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு நன்றி கூறினார்.

Tags : Japanese ,Government Agricultural College Students ,Miyawaki Forestry Training Camp ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்