×

கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டம்

கொள்ளிடம்,நவ.23: கொள்ளிடம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றிய அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் இளங்கோவன் வரவேற்றார். பிடிஓ ஜான்சன், ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
அங்குதான் (திமுக): மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளிடம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளுக்கு மட்டும் செலவினங்களுக்காக இதுவரை பொது நிதியிலிருந்து நிதி வழங்கப்படவில்லை. பக்கிங்காம் கால்வாய் மற்றும் பொது நீரோடைகளில் குப்பைகள் கொட்டுவதை தடைசெய்ய வேண்டும் என்றார். கொள்ளிடம் முதல் மாதிரவேலூர் வரை கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர் அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

மணவாளன் (திமுக): அரசூர்- காப்பியக் குடி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு இருக்கிறது எனவே சாலையை சீரமைக்க வேண்டும் மேலும் காப்பியக்குடி வாய்க்கால் ஒன்பது கிலோ மீட்டர் தூரம் வெட்டப்படாமல் உள்ளது என்றார். ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலங்களில் குடியிருப்புகளை மழை நீர் தேங்கி இருந்தால் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Tags : Kollidam Union Committee Meeting ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...