×

பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க சமுதாய கூடம், பள்ளிக்கூடத்தை தேர்வு செய்ய வேண்டும்

சீர்காழி, நவ. 23: பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க சமுதாய கூடம், பள்ளிக்கூடங்களை தேர்வு செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாக்க எவ்வாறு செயல்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமை வைத்தார். வேளாண்மை துறை இணை இயக்குனர் சுப்பையா, வருவாய் கோட்ட நேர்முக உதவியாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ஹரிதரன் வரவேற்றார்.

கூட்டத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால் வெள்ளம் ஏற்படும் பகுதிகளை கண்டறிய வேண்டும். அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க சமுதாயக் கூடம், பள்ளிக்கூடம், கோவில்களை தேர்வு செய்து வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் இருப்பு வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவ குழுவை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : community hall ,school ,public ,calamity ,
× RELATED தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்