×

அருப்புக்கோட்டை மக்கள் அவதி ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிவகாசியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

சிவகாசி, நவ. 23: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியது. கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு நடைபெற்றது. 4 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் ரூ. 3 கோடி செலவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டது. இதனை கடந்த 11ம் தேதி  விருதுநகர் வந்த தமிழக முதல்வர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் புதிய கட்டடத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஆர்டிஓ மூக்கன், இன்ஸ்பெக்டர் கண்ணன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், சன் இந்தியா குரூப் அதிபர் பிரம்மன்,

மாவட்ட மருத்துவரணி விஜய்ஆனந்த், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர் சையதுசுல்தான் இப்ராஹீம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் சீனிவாசன், திருத்தங்கல் மறவர் மகாசபை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி ஜெ பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் வேண்டுராயபுரம் காளிமுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் காளீஸ்வரபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் பாலபாலாஜி  மற்றும் அரசு அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajendrapalaji ,Regional Transport Office ,Sivakasi ,Aruppukottai ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு