×

புதிய வாக்காளர் சேர்க்கை முகாம்

சிவகங்கை, நவ.23:  திருப்புவனத்தில் வாக்காளர் சேர்க்கும் சிறப்பு முகாம் வாக்கு சாவடிகளில், திமுக மாவட்ட  துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் நடந்தது. திமுக முகவர்கள் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், பேரூர் செயலாளர் நாகூர்கனி கலந்துகொண்டனர். சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் சிறப்பு முகாம் நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் திமுக சார்பில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திமுக நகர் செயலாளர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி கணேசன், சின்னராதா, கண்ணன், பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Voter Enrollment Camp ,
× RELATED வாக்காளர் சேர்ப்பு முகாம்