×

விழிப்புணர்வு கூட்டம்

கமுதி, நவ.23: கமுதி அருகே குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி தொண்டு நிறுவனத்தினர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். சர்வதேச குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி விழிப்புணர்வு கூட்டம் கமுதி அருகே பாக்குவெட்டி கிராமத்தில் டிஆர்ஆர்எம் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தது. தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் மோகன பிரியா தலைமை தாங்கினார். 10 வயது முதல் 18 வயது குழந்தைகள் ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். குழந்தை திருமணம் மற்றும் யாரேனும் பெண் குழந்தைகளை தொடுதல் பற்றிய விழிப்புணர்வு போன்றவை எடுத்துரைக்கப்பட்டது. கௌரி நன்றி கூறினார்.

Tags : Awareness meeting ,
× RELATED தென்காசியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்