×

குளத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுவதா? விவசாயிகள் எதிர்ப்பு

வத்தலகுண்டு, நவ.23: வத்தலக்குண்டு அருகே குளத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். வத்தலகுண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் வேடகுளம் உள்ளது. இந்த குளத்தின் நடுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காசிவிஸ்வநாதர் ஆலயம் என்ற பெயரில் சிலர் கோயில் கட்டினர். அக்கோவிலுக்கு செல்வதற்கு மண் போட்டு பாதையும் அமைத்துள்ளனர். இதனால் விவசாயத்திற்கு குளத்தில் தண்ணீர் தேக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வத்தலக்குண்டு நஞ்சை பட்டாதாரர் சங்கத்தில் புகார் அளித்தனர்.

அதை தொடர்ந்து நஞ்சை பட்டாதாரர் சங்க செயலாளர் ராமதாஸ் மற்றும் விவசாயிகள் திண்டுக்கல் கலெக்டரிடம் நேரில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், குளங்களில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று அரசு ஆணைகள், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இது குறித்து ராமதாஸ் கூறுகையில், ஏற்கனவே விவசாயிகள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகிறோம். அது போதாது என்று இந்த பிரச்னை வந்துள்ளது. கலெக்டர் காலதாமதமின்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : pond ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...