×

திமுக சார்பாக புதிய வாக்காளர் சேர்க்கும் பணி

சின்னாளபட்டி, நவ.23: திமுக சார்பாக புதிய வாக்காளர் சேர்க்கும் பணியினை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி பார்வையிட்டார். ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில்  திமுக சார்பாக புதிய வாக்காளர் சேர்க்கும் பணியினை திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி பார்வையிட்டார். ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பார்த்தசாரதி, கன்னிவாடி பேரூர் செயலாளர் சண்முகம், டி.புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், வடக்கு ஒன்றிய திமுக பொருளாளர் கருப்புச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி வீனஸ் இளங்கோ உட்பட திமுகவினர் பலர் உடனிருந்தனர்.

Tags : voters ,DMK ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...