மொபட் மோதி தொழிலாளி பலி

திருப்பூர், நவ 23: திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் முருகன் (55). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூர் பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவு அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதரே கோவில் பூசாரி ஒருவர் வந்த மொபட்டும் முருகனின் மொபட்டும் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த முருகன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் முருகன் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>