×

கொரோனா பரிசோதனை 2 லட்சத்தை கடந்தது

ஊட்டி, நவ. 23: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தின நிலவரப்படி 7202 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், குணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7026 ஆக உள்ளது. 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு குறைந்து வரக்கூடிய நிலையில், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த கோவிட் கேர் மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஊட்டி, குன்னூர், கூடலூர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா பாிசோதனை ேமற்கொள்ள எடுக்கப்பட்ட சளி மாதிரிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் 102 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி கூறுகையில், நீலகிரி  மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதுவரை 2 லட்சத்து 03 ஆயிரத்து 200 சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்றார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘‘நீலகிரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது.

பல நாடுகளில் 2வது அலை துவங்கியுள்ளது. எனவே இந்த சமயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே பொதுமக்கள் முக கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

Tags : corona test ,
× RELATED கட்டுப்பாடுகளால் நெருக்கடி எதிரொலி...