ஓய்வூதியர் சங்க கூட்டம்

ஊட்டி, நவ. 23: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க குன்னூர் வட்ட கிளை பேரவை கூட்டம் நேற்று குன்னூரில் நடந்தது. தலைவர் ராமன்குட்டி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சஞ்சீவ் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஜெயலட்சுமி ஆண்டறிக்கையும், பொருளாளர் சின்னம்மா நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். தொடர்ந்து சங்கத்தின் புதிய துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்பு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். நீலகிரி மலை காய்கறிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எமிலி பாக்கியம் வரவேற்றார். ெஜயலட்சுமி நன்றி கூறினார்.

Related Stories:

>