பவானி நதிக்கு செல்லக்கூடிய நீரோடையில் கட்டிட கழிவுகள் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

ஊட்டி, நவ. 23: ஊட்டி-இத்தலார் சாலையில் முத்தோரை அருகே பாவனி நதிக்கு செல்லக்கூடிய நீரோடையில் கட்டிட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் நீர் மாசடைந்து வருவதுடன், சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

ஊட்டியில் இருந்து இத்தலார் செல்லும் சாலையில் முத்தோரை அருகே பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் பாவனி நதிக்கு செல்லக்கூடிய நீரோடை மற்றும் வனப்பகுதி உள்ளது. இந்த நீரோடையில் குப்பைகள், கான்கீரிட் கழிவுகள் கொட்டக்கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகாமையில் நீரோடையில் பல இடங்களில் கான்கிரீட், ஓடுகள் மற்றும் டைல்ஸ் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் நீர்வழிப்பாதை மறிக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதன் நீரோடை மாசடைந்து வருவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. ஊட்டி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இச்செயல் அரங்கேறி வருகிறது. எனவே நீரோடைகள் சதுப்பு நில பகுதிகளில் கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் தடுத்து அவற்றை பாதுகாக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories:

>