வாக்குச்சாவடி மையங்களில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கே.எல்.கே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  நடைபெற்று வந்த சிறப்பு வாக்காளர் முகாமை நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அவர் அங்கே பணியில்  இருந்தவர்களிடம்  வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாமில் நடைபெற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து புதிதாக சேர்ந்த வாக்காளர்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள்  மு.பகலவன், கதிரவன், டாக்டர் பரிமளம், தலைமை பேச்சாளர் தமிழ் சாதிக், பேரூர் நிர்வாகிகள் அறிவழகன், ரமேஷ், மனோகரன், ஒன்றிய துணைச்செயலாளர்கள், பாஸ்கரன், சுகு திமுக நிர்வாகிகள் ராகவரெட்டிமேடு ரமேஷ், கருணாகரன், வழக்கறிஞர் அணி நிர்வாகி தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வருகிற டிசம்பர் மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறக்கூடிய சிறப்பு முகாம்களில் திமுகவினர் விழிப்புடன் இருந்து வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகிய பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Related Stories:

>