இறந்த பெண் அடையாளம் தெரிந்தது: 2 பேரிடம் விசாரணை

திருக்கழுக்குன்றம்: பூந்தண்டலம் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே கடந்த 20ம் தேதி ஒரு பெண் சடலம் கிடந்தது. இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் அந்தப் பெண் சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் பவானி (17 )என்றும் தெரிந்தது. பவானியும், இவரது தாய் சுமதியும் முதலில் திருக்கழுக்குன்றம் அடுத்த குழிப்பாந்தண்டலம் என்ற இடத்தில் டிபன் கடை வைத்திருந்தனர். பின்னர் கல்பாக்கம் அடுத்த  வெங்கப்பாக்கம் பகுதியில் கடை வைத்திருந்தனர். அங்கு வியாபாரம் சரியாக இல்லாததால் பெரும்புதூர் அடுத்த ஒரகடத்திற்கு கடையை மாற்றியுள்ளனர்.

கொரோனா ஊரடங்காள் தாய் சுமதியும், பவானியும் சேலம் ஆத்தூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வெங்கப்பாக்கம் பகுதியில் டிபன் கடை வைத்திருந்த போது பவானிக்கும் பல ஆண்களுக்குமிடையே தவறான பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பவானி கடந்த  20ம் தேதி பூந்தண்டலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>