போலீஸ்காரர் காதலித்து ஏமாற்றியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை: வீடியோ பதிவில் வாக்குமூலம்

பெரம்பூர்: வியாசர்பாடி ராஜிவ்காந்தி நகர் 19வது தெருவை சேர்ந்த ஜான் கென்னடி மகள் கிரேசி (17), மின்ட் பகுதியில் உள்ள கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இவருக்கும், புழல் சிறையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வரும், அரக்கோணத்தை சேர்ந்த  மகேஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன், முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த கிரேசியின் பெற்றோர், மகளை கண்டித்ததுள்ளனர். இதுபற்றி காதலன் மகேஷிடம் தெரிவித்த கிரேசி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

ஆனால், தற்போது என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது, என்று அவர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கிரேசி கடந்த 19ம் தேதி நள்ளிரவு தனது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிரேசி வீடியோ பதிவில் வாக்குமூலம் அளித்தார். அதில், காதலன் மகேஷை சும்மா விடாதீர்கள். அவன் என்னை ஏமாற்றி விட்டான். என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கிரேசி உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.  

எண்ணூர் குப்பத்தை  சேர்ந்த அருள்மணி (40), நேற்று பிரார்த்தனைக்காக எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 12வது தெருவில் உள்ள கிறிஸ்தவ சபைக்கு வந்தபோது, திடீரென 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மெக்கானிக் தற்கொலை

அரும்பாக்கம் ஜெய் நகரை சேர்ந்த ஏசி மெக்கானிக் வெங்கடேசன் (23), கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதை அவரது தந்தை நிர்மல்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டதுடன், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே வெங்கடேசன் இறந்தார்.

Related Stories:

>