அண்ணல் அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க 25ம் தேதி கடைசி நாள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை.தமிழக அரசு சார்பில், ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தொண்டு செய்யும் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது அந்த வகையில் 2021ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதுபெற விரும்புவோர் தங்களது முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இற்கான www.tn.gov.in/tn/forms/Deptname/1என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 25ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>