விடுமுறையில் வீட்டுக்கு வந்த லண்டன் பேத்திக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தாத்தா கைது

அண்ணாநகர், நவ.22: சென்னையை சேர்ந்த சாந்தி (45), குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். இவரது 17 வயது மகள், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், அச்சிறுமி கடந்த சில மாதங்களாக கோபமாக பேசுவதும், ஆண்கள் போல் உடையணிந்து கொள்வதும், பலமணி நேரம் பூட்டிய அறைக்குள் தனிமையில் இருப்பதுமாக இருந்துள்ளார். இதை பார்த்து வேதனையடைந்த பெற்றோர், அவள் படிக்கும் பள்ளி நிர்வாகம் மூலம் கவுன்சலிங் கொடுத்தனர். அப்போது,  கடந்த 2014ம் ஆண்டு பள்ளி விடுமுறையின்போது,  சென்னை அண்ணாநகரில்  வசிக்கும் சின்ன தாத்தா கிஷான் சந்த்தலானி (68) வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது, அவர் அடிக்கடி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெண்ணாக இருப்பதால்தானே பாலியல் தொல்லை செய்கிறார் என்பதால், மன உளைச்சலில் ஆண் உடை அணிந்து தனிமையில் இருந்ததாக, சிறுமி கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆன்லைன் மூலம் கடந்த 11ம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, லண்டனில் இருந்து திருமங்கலம் வந்த பெற்றோர் நேற்று முன்தினம் தங்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதன்பேரில், கிஷான் சந்த்தலானியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மற்றொரு சம்பவம்: நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த அந்தோணிமுத்து (52), அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தில் போலீசார் இவரை கைது செய்தனர்.

Related Stories:

>