×

ஜெய்ப்பூரில் போலீசார் மடக்கினர் வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் மொத்தமாக படிவம் பெறக்கூடாது

திருச்சி, நவ.22: திருச்சி மாநகராட்சி, மன்னார்புரம், செங்குளம் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவராசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. நவ.16 முதல் டிச.15ம் தேதி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி அலுவலர்களை கொண்டு படிவம் 6, 7, 8 மற்றும் 8யு படிவம் பெறப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய வாக்காளர் சேர்த்தல் தொடர்பாக மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் 342 வாக்குச்சாவடி மையங்களிலும், ரங்கம் 339, திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் 271, திருச்சி (கிழக்கு) 258, திருவெறும்பூர் 294, லால்குடி 249, மண்ணச்சநல்லூர் 273, முசிறி 255, துறையூர் (தனி) 268 என மொத்தம் 9 தொகுதிகளிலும் 2,531 வாக்குச்சாவடி மையங்களில் இன்று (நேற்று), நாளை (இன்று) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், விடுபட்டவர்கள், திருத்தம் செய்வது தொடர்பாகவும், நீக்கம் செய்வது 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக பெயர் சேர்ப்பது தொடர்பாகவும் சிறப்பு முகாமில் படிவம் வழங்கப்படுகிறது.

படிவத்தினை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும். மேலும் டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. மேற்கண்ட சிறப்பு முகாம்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி முகவரை அனுமதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் மொத்தமாக எக்காரணம் கொண்டும் படிவம் 6,7, 8 மற்றும் 8யு பெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுருக்கு முறை திருத்தம் 2021 முழுமைக்கும் சேர்த்து ஒரு வாக்குச்சாவடி முகவர் அதிகபட்சமாக 30 மனுக்கள் வரை சமர்ப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 5 மனுக்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டாது என்ற விபரத்தினை வாக்குச் சாவடி முகவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் ஏதேனும் சந்தேகம் எழும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றார்.

Tags : Jaipur ,
× RELATED லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து...