×

1,168 வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

திருவாரூர், நவ. 22: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்திற்கான சிறப்பு முகாமானது ஆயிரத்து 168 வாக்கு சாவடிகளில் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வரும் 2021 ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 4 எம்எல்ஏ தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 5 லட்சத்து 344 ஆண்கள், 5 லட்சத்து 15 ஆயிரத்து 171 பெண்கள் மற்றும் இதரர் 40 பேர் என மொத்தம் 10 லட்சத்து 15 ஆயிரத்து 555 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 168 வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டிலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு வாக்குசாவடிகளில் நடைபெற்ற சிறப்பு சுருக்க திருத்த பணியினை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களில் தொடர்புடைய பாகங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் 18 வயது நிறைவடைந்து இது நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், வரும் ஜனவரி முதல் தேதியில் 18 வயது நிறைவடைய உள்ளவர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 6ஐ பெற்று அதனைப் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம், வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கு படிவம் 7லும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வதற்கு படிவம்-8லும், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு படிவம் 8ஏ யிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் அடுத்த மாதம் 15ந் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 168 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும்(நேற்று) மற்றும் நாளையும் (இன்று) நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் வாக்காளர் பட்டியல்களை http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். மேலும் www.nvsp.inஎன்ற வலைதளத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது ஆர்.டி.ஒ பாலசந்திரன், தாசில்தார் நக்கீரன், நகராட்சி கமிஷ்னர் (பொ) முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Tags : camp ,polling booths ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு