×

தஞ்சை மாவட்டத்தில் ஆண்கள் கருத்தடை சிறப்பு முகாம்

தஞ்சை, நவ.22: தஞ்சை மாவட்டத்தில் ஆண்கள் கருத்தடை சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. உலக ஆண்கள் கருத்தடை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் 3 நாள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. வரும் 25ம்தேதி வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 27ம் தேதி மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், டிசம்பர் 4ம் தேதி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் ஆண் கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. ஆண் கருத்தடை சிகிச்சை பாதுகாப்பானது. எளிய முறையில் சில நிமிடங்களில் செய்யப்படுகிறது.

பக்க விளைவுகள் கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கையானது. தழும்பு இல்லாதது. தையல் இல்லாதது. ஆண்மைத குறைவு ஏற்படாது. கடின உழைப்பிற்கு தடையில்லை. இது ஒரு 100 சதவீதம் நிரந்தரமான கருத்தடை ஆகும்.  எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தகுதி வாய்ந்த ஆண்கள் அதிகளவில் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Men ,camp ,district ,Tanjore ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!