×

தஞ்சையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த விளக்க ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம்

தஞ்சை, நவ.22: தஞ்சை அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த விளக்க ஆர்ப்பாட்ட வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தொமுச. துணை பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன், எஸ்இடிசி தொமுச. செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி தொமுசபேரவை துணை பொதுச் செயலாளர் பாண்டியன், சிஐடியூ கவுரவ தலைவர் மனோகரன், ஏஐடியூசி சம்மேளன துணை தலைவர் துரை.மதிவாணன், பொதுச் செயலாளர் கஸ்தூரி, ஐஎன்டியூசி பொருளாளர் சரவணன், எம்.எல்.எப்.பொது செயலாளர் பாலு, எஸ்.எம்.எஸ்.பொதுச் செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் மூலம் வருமானம் அதிகமுள்ள வழித்தடங்களையும், பேருந்துகளையும் தனியாருக்கு அளிப்பது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 2019 ஏப்ரல் முதல் பணி ஓய்வு பெற்றவர்கள், இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணிக்கொடை தொகை, வருங்கால வைப்பு நிதி தொகை உள்ளிட்ட பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களின் 14வது சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும்.

பொருளாதாரம் கொரோனா முடக்கத்தால் முடங்கி போன தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், புதிய மின்சார சட்ட திருத்தம் 2020, சுற்றுச்சூழல் வரை திட்டம் 2020 ஆகியவற்றை கைவிட வேண்டும். கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக செயல்படும் மக்கள் விரோத தொழிலாளர் விரோத மத்திய அரசை கண்டித்து வரும் 26ம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்பது குறித்தும் கோரிக்கைகளை விளக்கியும் ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம் நடைபெற்றது.

Tags : Transport workers ,strike ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...