×

விராலிமலை அருகே கார்மோதி மூதாட்டி பலி

விராலிமலை, நவ.22: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள முல்லையூர் வல்லக்கோன்பட்டியை சேர்ந்தவர் திம்மாயி (70). இவர் நேற்று விராலிமலைக்கு வந்து விட்டு குறிச்சிபட்டி பிரிவு ரோடு அருகே மதுரை-திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி திம்மாயி பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Carmothi ,Viralimalai ,
× RELATED விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின்...