×

அதிகாரிகள் பேச்சு திருப்தி இல்லாததால் சர்க்கரை ஆலை முன்மாதிரி பேரவை கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

பெரம்பலூர், நவ. 22: பெரம்பலூர் சர்க்கரை ஆலை 43-வது முன்மாதிரி பேரவைக் கூட்டம் நேற்று சர்க்கரை ஆலை கூட்ட அரங்கில் பொதுமேலாளர் விஜயா தலைமையில் நடைபெற்றது. ஆலை நிர்மச் செயலாளர், தலைமை ரசாயணர் தலைமை நிர்வாகி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது, 2015-2016, 2016-2017 ம் ஆண்டுக்கு தமிழக அரசு தரவேண்டிய (SAB ) பாக்கிதொகை ரூ.33 கோடியில் டிசம்பர் மாதத்தில் ரூ.11 கோடியே 90 லட்சமும், பிப்ரவரி மாதத்தில் பாக்கி தொகையையும் கொடுக்க உள்ளதாக அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு திருப்தி இல்லாததால் டிசம்பர் 31க்குள் விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கி தொகை முழுவதையும் தரவேண்டும் என கோரி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த கூட்ட புறக்கணிப்பில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் இராசேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சீனிவாசன்,
பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்பழகன், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பெருமாள், ராஜீவ் விவசாயிகள் பேரவை தலைவர் வரதராஜன், பங்குத்தாரர்கள் சங்கத் தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன், பங்குத்தாரர்கள் சங்க செயலாளர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : sugar mill prototype assembly meeting ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...