×

திரவக் கழிவு மேலாண்மை ஜெயங்கொண்டத்தில் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி

ஜெயங்கொண்டம், நவ.22: ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் திரவக்கழிவு (கழிவுநீர்) மேலாண்மை செயல்படுத்தும் விதம் (பூமிக்கடியில் உறிஞ்சி குழி மூலம் உள் செலுத்தும் விதம்) குறித்து ஊராட்சி தலைவர்கள் துணைத்தலைவர்கள் வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தூய்மை பாரத இயக்கம் சார்பில் திரவக்கழிவு (கழிவுநீர்) மேலாண்மை செயல்படுத்தும் விதம் குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் து.தலைவர்கள், வார்டு உறுப்பினைகள் உள்ளிட்ட களப் பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு உதவி திட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) ஜெயங்கொண்டம் அருளப்பன், தா.பழூர் தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் புரஜெக்டர் காணொளி காட்சி மூலம் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அன்றாடம் பயன்படுத்தும் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியில் விடுவதால் மாசு மற்றும் கிருமிகள், விஷ ஜந்துக்கள் இவற்றிலிருந்து விடுபட கழிவு நீர்களை வெளியில் விடாமல் பூமிக்கடியில் உறிஞ்சி குழி மூலம் உள் செலுத்தும் விதம் குறித்து பயிற்சி முகாமில் விளக்கம் அளித்து பேசினார்.

இதில் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட தழுதாழைமேடு, காரைக்குறிச்சி, கூவத்தூர் ஆகிய ஊராட்சிகளை முன்னெடுத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு அவன் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் களப்பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் மேலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags : Panchayat Representatives ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது