×

பொதுமக்கள் கோரிக்கை மயிலாடுதுறையில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கல்

மயிலாடுதுறை, நவ.22: மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுக்காக்களில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வகை முகாம் நடைபெற்றது. ஏற்கனவே அடையாள அட்டை பெற்று ஸ்மார்ட்கார்டிற்கு விண்ணப்பம் செய்த 20 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி இதற்கான அட்டையை வழங்கினார். இந்த முகாமில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரணவன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு கார்டுகளை வழங்கினர்.

மேலும் இந்த முகாமில் புதிய மாற்றுத்திறனாளிகள் கண்டறியும் முகாமில் மனநல அலுவலர், முடநீக்கியல் வல்லுனர், அறுவைசிகிச்சை நிபுணர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் அலுவலகத்தினர் என 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாகளுக்கேற்ப உபகரணங்கள் அளவு எடுக்கப்பட்டு அவைகள் தயாரிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக வரவழைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறினர். திருமயிலாடி சுந்தரேஸ்வரர் கோயிலில் சூரசம்ஹார விழா சிறப்பு அபிஷேகம் கொள்ளிடம், நவ.22: கொள்ளிடம் அருகே திருமயிலாடி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹாரவிழா சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 1.500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் வடக்கு நோக்கி நிஷ்டையில் அமர்ந்து அருள் பாலிக்கும் வடிவேல் குமரனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோரும் சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். சூரனை வதம் செய்யும் காட்சி மிகவும் நேர்த்தியாக நடைபெறும். ஆனால் நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கொரோனா காரணமாக பக்தர்கள் அனுமதி இன்றி கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு சுந்தரேஸ்வரர் மற்றும் வடக்கு நோக்கிய வடிவேல் குமரனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்தனர்.

Tags : persons ,Mayiladuthurai ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...