×

42 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன அனந்தமங்கலம் கோயில் சிலைகள் மீண்டும் கொண்டு வரப்பட்டது

தரங்கம்பாடி, நவ.22: தரங்கம்பாடி அருகே உள்ள அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் 1978ம் ஆண்டு ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் காணாமல் போயின. இது குறித்து பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலையை தேடி வந்தனர். இந்நிலையில் இச்சிலைகள் லண்டனில் ஒருவரிடம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுத்து லண்டனில் இருந்து சிலைகளை சென்னைக்கு கொண்டு வந்தனர். அதன்பின் நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து கும்பகோணம் கொண்டு வந்து கும்பகோணத்தில் இருந்து வேன் மூலம் நேற்று அனந்தமங்கலம் கொண்டு வந்தனர்.

அனந்தமங்கலம் ஆர்ச்சில் இருந்து அலங்காரம் செய்யபட்ட சிலைகள் மேளதாளம் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பக்தத்கள் மலர்தூவி சாமி சிலைகளை வரவேற்றனர். காணாமல்போன மற்றொரு சிலையான ஆஞ்சநேயர் சிலையும், விரைவில் மீட்டு அனந்தமங்கலம் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. 42 வருடங்களுக்கு பின் காணமால் போன சிலைகள் கோயிலுக்கு வந்தது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags : Ananthamangalam ,
× RELATED அனந்தமங்கலம் கிராமத்தில்...