×

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும்

சீர்காழி, நவ. 22: சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பம் பழுதடைந்துள்ளது. இதை உடனே மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரில் இருபுறங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் கம்பங்கள் பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. மேலும் அதில் உள்ள மின்கம்பம் முறிந்து விழும் நிலையில் உள்ளது.

டிரான்ஸ்பார்மர் அருகே சென்றால் மின்சாரம் தாக்குவதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிகின்றனர். மின்சாரம் வெளிப்படுவதால் அந்த பகுதியில் செல்வதற்கு பொதுமக்கள் வியாபாரிகள் அச்சப்படுகின்றனர். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் பழுதடைந்து கீழே விழும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்கம்பங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sirkazhi Bidari North Road ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ