புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடம் திறப்பு விழா காண்பது எப்போது?

கரூர், நவ. 22: கரூர் சணப்பிரட்டியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாவட்டம் சணப்பிரட்டியில் இந்த பகுதியினர் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 7 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது பணிகள் முடிவடைந்து திறப்பு விழா காணும் நிலையில் உள்ளது.

ஆனாலும், சமுதாய கூடம் இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே பகுதியினர் பயன்பாட்டிற்கான இதனை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>