×

7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் தேர்வு அரசு மருத்துவ கல்லூரிக்கு வந்த 10 மாணவர்களுக்கு வரவேற்பு

கரூர், நவ. 22: அரசு பள்ளியில் பயின்று சிறப்பு இடஒதுக்கீட்டில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். அரசுப்பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் பயிலும் வகையில் சமீபத்தில் தமிழக அரசு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது. இதற்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சிறப்பு ஒதுக்கீட்டின்படி அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

கல்லூரியில் பயில தேர்வான 10 மாணவ, மாணவிகளும் நேற்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற கல்லூரி முதல்வர் அசோகன், சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கி பாராட்டி வாழ்த்தினார்.

Tags : examination ,Government Medical College ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...