×

தேனி முருகன் கோயில்களில் திருக்கல்யாண விழா

தேனி, நவ. 22: தமிழ் கடவுளான முருகனுக்கு ஏற்ற மாதமாக கார்த்திகை மாதம் கொண்டாடப்படுகிறது . ஐப்பசி மாதம் 30ம் நாள் தொடங்கி கார்த்திகை மாதம் ஆறாம் நாள் வரை கந்தசஷ்டி திருவிழா சூரசம்காரம் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் முருகன் கோயில்களில் நடத்தப்படுவது வழக்கம். தேனி நகர் மதுரை ரோட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரவிழா நடந்தது. இதில் முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், மாவிளக்கு எடுத்தும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர். இக்கோயிலில் நேற்று விநாயகர் பூஜையுடன் சுப்ரமணிய சுவாமிக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல தேனி என்ஆர்டி நகரில் உள்ள கணேச கந்தபெருமாள் கோயிலிலும் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags : Tirukkalyana ,ceremony ,Theni Murugan ,temples ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா