×

சின்னமனூர் சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் தீ

சின்னமனூர், நவ. 22: சின்னமனூர் சீலையம்பட்டி சாலையில் சப்ரிஜிஸ்டர் அலுவலகம் இயங்கி வருகிறது.இதன் வளாகத்தின் நுழைவாயிலில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முழுவதும் மின்சாரம் தடைபட்டதால் காலையிலிருந்து ஜெனரேட்டரில் அலுவலகம் இயங்கியது. இந்நிலையில் திடீரென ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக மாலை 6 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து சின்னமனூர் காவல்நிலையத்திற்கும், உத்தமபாளையம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். அப்போது ஜெனரேட்டர் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். முக்கால் மணி நேரமாக போராடி தீ அணைக்கப்பட்டது.

Tags : Chinnamanur Sub-Registrar's Office ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...