×

கருத்தரங்கம்

ராமேஸ்வரம், நவ.22:  உலக மீனவர் தினத்தையொட்டி பாம்பனில் மீனவ மக்கள் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மோட்சராக்கினி தலைமை வகித்தார். சகாயம் வரவேற்றார். கடல் வளம், இயற்கை வளம், மீனவர்களுக்கான சட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், வாழ்வுரிமை குறித்து பலர் பேசினர். பாதிரியார் பிரிட்டோ ஜெயபாலன், பாம்பன் ஊராட்சி தலைவர் அகிலா, மாநில கூட்டமைப்பு தலைவி ராமலெட்சுமி, மீனவ மகளிர் அணி தலைவி இருதயமேரி, ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்க துணைத்தலைவர் தில்லைபாக்கியம், மீனவர் சங்க பிரதிநிதிகள் என்.ஜே.போஸ், ஜஸ்டின், எமரிட், ஜெரோன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதுபோல் பாம்பன் வடக்கு கடற்கரையில் நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் நடைபெற்ற மீனவர் தின நிகழ்ச்சியில் கடலில் மீன்பிடிக்க சென்று உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராயப்பன் தலைமையில் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் மீனவர் பிரதிநிதிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு மீனவ மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர்.

Tags : Seminar ,
× RELATED மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் முதியோர்கள் குறித்த தேசிய கருத்தரங்கம்