×

தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தொண்டி, நவ.22:  தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் மீண்டும் விவசாய பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள். தொண்டி, நம்புதாளை,முகிழ்த்தகம் உள்ளிட்ட பகுதியில் கடந்த மாதம் பெய்த சிறு மழைக்கு விதைத்தனர். அடுத்தடுத்து மழை பெய்யாததால் முளைத்த பயிர்கள் அனைத்தும் கருக துவங்கியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயல்காடுகளில் தண்ணீர் கிடக்கிறது. இதையடுத்து மீண்டும் விவசாயிகள் களை எடுப்பது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் ஆர்வமுடன் ஈடபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் முளைத்த பயிர்கள் கருகியதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாற்று நடலாம் என்று உள்ளனர். வரும் நாள்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்தால் மட்டுமே கண்மாய்களில் தண்ணீர் நிரம்பும். அப்போதுதான் நல்ல மகசூல் காண முடியும். மழை பெய்ய வில்லை என்றால் நஷ்டம் தான் ஏற்படும். இதுகுறித்து விவசாயிகள் கூறியது, கடந்த சில தினங்களாக மழை பெய்ததால் மீண்டும் கடனை வாங்கி பணியினை தொடர்கிறோம். அடுத்து வரும் நாள்கள் மழை பெய்தால் மட்டுமே பயிர்கள் பிளைக்கும். கண்மாயில் உள்ள தண்ணீர் போதாது. நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிவித்துள்ளதால் நம்பிக்கையுடன் இறங்கியுள்ளோம் என்றார்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...