×

ஆத்தூர் ஒன்றியத்தில் கருங்குளம் நிரம்புவதால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னாளபட்டி, நவ. 22: ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர் கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டி கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து கருங்குளம் நிரம்புவதால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர் கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டி கண்மாய் என மூன்று கண்மாய்கள உள்ளன. ஆத்தூர் ராஜவாய்க்காலிலிருந்து வரும் மழை தண்ணீர் கருங்குளம், நடுக்குளம் நிறைந்து புல்வெட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் பாதை இயற்கையாகவே அமைந்துள்ளது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் ஆத்தூர் ராஜவாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கருங்குளத்திற்கு தண்ணீர் அதிகம் வந்து குளம் நிரம்பி வருகிறது. இதனால் குளத்தை சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தனது சொந்த செலவில் கருங்குளத்தை தூர்வாரி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Paddy farmers ,pond ,Attur Union ,
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...