128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை

திருப்பூர், நவ. 22:   அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 128 மாணவியர்களுக்கு ரூ.4.82 லட்சம் கல்வி உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன்  வழங்கினார். கனரா வங்கியின் 115 வது நிறுவனர் நாள் தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சுமார் 128 மாணவியர்களுக்கு ரூ.4, லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பில் கல்வி உதவித்தொகையை  கலெக்டர் விஜயகார்த்திகேயன் திருப்பூர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று வழங்கினார்.

 இதில் 34 பள்ளிகளைச் சார்ந்த 5ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் 63 மாணவியர்களுக்கு தலா ரூ.2500ம் மற்றும் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 68 மாணவியர்களுக்கு தலா ரூ.5000ம் என அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 128 மாணவியர்களுக்கு ரூ.4,82,500 மதிப்பிலான உதவித்தொகையினை மாவட்ட வழங்கினார்.  இதில் முதன்மை கல்வி அலுவலர் ராமேஷ், கனரா வங்கி மண்டல துணைப்பொது மேலாளர் ஹரிநாரயணன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸ்சாண்டர் மற்றும் பள்ளி மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>