கோவையில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி

கோவை, நவ. 22: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கோவையில் இன்று கிரிக்கெட் போட்டி துவங்குகிறது. தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கோவை மு.மா.ச. அறக்கட்டளை சார்பில் கிரிக்கெட் போட்டி கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் இன்று (ஞாயிறு) காலை 7 மணிக்கு துவங்குகிறது. இதை, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. துவக்கி வைக்கிறார். இப்போட்டி, வரும் நவம்பர் 29ம் தேதி, டிசம்பர் 6ம் தேதி, 13ம் தேதி என மொத்தம் நான்கு நாட்கள் நடக்கிறது. 64 அணிகள் பங்கேற்கின்றன.

இப்போட்டி, நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் ரொக்கம், கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரம் ெராக்கம், கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம், கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது தவிர, சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த ஆல் ரவுண்டர் ஆகியோருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான மு.மா.ச.முருகன் செய்துள்ளார்.

Related Stories:

>