×

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்வு

ஈரோடு, நவ.22: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நேதாஜி தினசரி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வரத்தாகும் காய்கறிகள் மாநகர் மட்டும் அல்லாது மாவட்டத்தின் பிற பகுதி மக்களும், மளிகை கடை வியாபாரிகளும் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி
செல்வர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்றுப்புற மாவட்ட பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக காய்கறிகள் மகசூல் குறைந்தது. இதனால் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கும் காய்கறிகள் குறைவாகவே வரத்தாகியுள்ளது.

 இதன் காரணமாக கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று விலை உயர்ந்து கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று ஒரு கிலோ ரூ.60க்கும், ரூ.15க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.25க்கும், இதேபோல் இதர காய்கறிகளும் கடந்த வாரத்தைவிட விலை உயர்ந்து காணப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு