சேலத்தில் நாளை வீரபாண்டி ஆறுமுகம் நினைவுநாள் அனுசரிப்பு வீரபாண்டி ராஜா அறிக்கை

சேலம், நவ.22: சேலத்தில் நாளை, வீரபாண்டி ஆறுமுகம் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து,திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட முன்னாள் செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்தன. அவர் ஏழை எளிய,பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் அனைத்து தரப்பு மக்களின் மேன்மையை தனது லட்சியமாகவும், கனவாகவும், எண்ணமாகவும் கொண்டு அவற்றை நிறைவேற்ற அரும்பாடு பட்டார். அவரது நினைவு நாள் நாளை (23ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் அன்று காலை 8 மணியளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கட்சி தோழர்கள், தலைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>