போக்குவரத்து காவலர் மாயம்

விழுப்புரம், நவ. 22:  விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (58). விழுப்புரம் போக்குவரத்து காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கணேசன், இவரது மனைவி லட்சுமி (48) ஆகியோருக்கு இடையே அவ்வப்போது குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 10ம் தேதி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியிடம் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் திரும்பி வரவில்லை. இதுகுறித்து லட்சுமி விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கணேசனை தேடி வருகின்றனர்.

Related Stories:

>