பட்டாசு வெடி விபத்தில் மேலும் ஒரு சிறுமி பலி

கள்ளக்குறிச்சி, நவ. 22:  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கொங்கராயபாளையம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் அதே கிராமத்தில் அரிசி கடை நடத்தி வருகிறார். அதே கடையில் திபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்தார். அப்போது கடையின் அருகில் இளைஞர்கள் பட்டாசு வெடித்துகொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பட்டாசு ஒன்று தெரித்து கடையில் விழுந்துள்ளது. சிறிது நேரத்தில் பட்டாசு கடையில் புகை மூட்டம் ஏற்பட்டது. அதனையடுத்து கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் கடையின் அருகில் விளையாடி கொண்டு இருந்த அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் தர்ஷித், பழனிவேல் மகள்கள் நிவேதா(7), வர்ஷா(6) ஆகிய மூன்று பேர்களின் மீதும் பட்டாசு நெருப்புபட்டு தீக்காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த மூன்று பேரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தர்ஷித் உயிரிழந்தான். நிவேதா, வர்ஷா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் நிவேதா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தாள்.

Related Stories:

>