×

பிலிப்பைன்ஸ் பெர்பெக்சுவல் மருத்துவ கல்லூரியில் 2ம்கட்ட கலந்தாய்வு

நெல்லை, நவ.22: பிலிப்பைன்ஸ் பெர்பெக்சுவல் மருத்துவக்கல்லூரியில் 2ம்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில் தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுரிகளில் 7.5% இடஒதுக்கீடு, சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேற்று முடிவுற்றது. அடுத்ததாக பொதுபிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கும் நிலையில் பிலிப்பைன்ஸ் பெர்பெக்சுவல் மருத்துவக்கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு 2ம்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இக்கல்லூரியில் சேர அம்பை டாக்டர் சந்திரசேகர் மகன் விஜயபிரதீப் விண்ணப்பித்திருந்தார். அதை பரிசீலித்த மருத்துவ சேர்க்கை பொறுப்பாளர்கள் சாம் ஹெல்மன், வளவன் ஆகியோர் கலந்தாய்வில் பங்கேற்க பரிந்துரைத்தனர்

இதையேற்ற பிலிப்பைன்ஸ் பென்ஸ் நிறுவன நிர்வாகி சுப்பிரமணியன், நெல்லை மைய இயக்குனர் டாக்டர் ஆனந்தராஜ், மாணவர் விஜயபிரதீப் விண்ணப்பத்தை ஏற்றனர். சிறப்பு அழைப்பாளராக நெல்லை பொதிகை கல்வி நிறுவனத்துக்கு வந்த டாக்டர் ஹாரி தாமஸ் ரோட்ரிக்ஸ், மாணவரின் பெற்றோரிடம் விண்ணப்பத்தை பெற்று கலந்தாய்வு அனுமதி கடிதத்தை வழங்கினார். ஏற்பாடுகளை நெல்லை மைய அலுவலர்கள் மாரிமுத்து, ஜோதிபிரவீனா, இசக்கியம்மாள் செய்திருந்தனர்.  

Tags : Phase ,consultation ,Philippine Perfectual Medical College ,
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்