×

அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிப்பு தண்டுபத்தில் கனிமொழி எம்பி பேச்சு

உடன்குடி,நவ.22: அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என தண்டுபத்தில் நடந்த வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார். திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட காயல்பட்டினம் நகராட்சி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் தண்டுபத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். காயல்பட்டிணம் நகர செயலாளர் முத்து முகமது, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், உடன்குடி செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங், துணைச் சேர்மன் மீராசிராஜூதீன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் சுடலை, மாவட்ட கவுன்சிலர் ஜெசிபொன்ராணி, மாவட்ட இலக்கியஅணி அமைப்பாளர் ராஜபாண்டி, ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கிருபாகரன் வரவேற்றார்.

 சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசியதாவது:  வருகிற 2021சட்டமன்றத் தேர்தல் தமிழக மக்களை அனைத்து துயரங்களிலிருந்தும் மீட்கும் தேர்தலாக அமையும். அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜவின் அனைத்து மக்கள் விரோத திட்டங்கள், சட்டங்களை அதிமுக அரசு ஆதரித்து வருகிறது. விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களையும், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் பாஜவின் நடவடிக்கைகளை அதிமுக அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மக்கள் விரோத அதிமுக அரசை தமிழக மக்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் அகற்ற வேண்டும். அதற்கு இப்போதே தேர்தல் பணியை முழுமையாக தொடங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் உடன்குடி நகர செயலாளர் ஜாண்பாஸ்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, இளங்கோ, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டன

Tags : Kanimozhi MP ,parties ,AIADMK ,
× RELATED இந்தியா – சீனா எல்லை பிரச்னை குறித்து...