மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சிதம்பரம், நவ. 21: சிதம்பரம் அருகே மேலமூங்கிலடி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் ஒன்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேலமூங்கிலடி கிராமத்தை சேர்ந்த புகழேந்தி (59) மற்றும் சபா என்கிற சபாநாயகத்ைத (23) போலீசார் கைது செய்தனர்.    இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு சிதம்பரம் தாலுகா போலீசார் கடலூர் எஸ்பி அபிநவ் மூலமாக கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories:

>