மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

இடைப்பாடி, நவ.21: இடைப்பாடி அருகே ஆலாச்சம்பாளையத்தில், மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. முன்னதாக யாக பூஜை வேள்வியை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள், விழா குழுவினர் புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து அம்மனை தரிசிக்க திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>