தலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஆத்தூர், நவ.21:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி தேசிய நெடுங்சாலை, தனியார் பள்ளி அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் முகத்தை மூடியபடி சென்ற வாலிபர், விளக்கை அணைத்து விட்டு ஏடிஎம் இயந்திரத்தை திறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த அலாரம் ஒலிக்க துவங்கியது. இதை கண்ட வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தகவலின் பேரில், விரைந்து வந்த வங்கி மேலாளர் வெங்கடகிரி, தலைவாசல் போலீசில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி, தப்பிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஏடிஎம் மற்றும் அதன் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தியதில்,  கொ ள்ளையில் ஈடுபட்டது சார்வாய் கிராமத்தை சேர்ந்த விஜய் (30) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>