மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

நாமக்கல், நவ.21:  மத்திய அரசை கண்டித்து, நாமக்கல்லில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல்லில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில், நேற்று வாயிற்கூட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டம் மற்றும் பல்வேறு தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து, இந்த போராட்டம் நடைபெற்றது.  இதற்கு தொமுச செயலாளர் பிரகாசம் தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்ரமணியம், பழனிசாமி, குமார், செல்வராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர்.

Related Stories:

>